டில்லி:

நிதி தீர்மானம் மற்றும் வைப்புநிதி காப்பீட்டு (ஃஎப்ஆர்டிஐ) மசோதா என்ற டெபாசிட் தொகையை அரசு எடுத்துக் கொள்ளும் மசோதா வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் சூழல் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அறிக்கையை தயார் செய்ய கூட்டு குழு மேலும் கால அவகாசம் கேட்டுள்ளது.

கூட்டு குழு மேலும் கால அவகாசம் கேட்டுள்ளதால் பட்ஜெட் கூட்ட தொடரின் கடைசி நாள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று லோக்சபாவில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தகவல் தெரிவித்தார். முன்னதாக அறிக்கை தயார் ஆகாததால் கடந்த 15ம் தேதி கூட்டு குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய முடியாமல் போனது.

இந்த மசோதாவில் நிதி நிறுவனங்களான வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் அதற்கான சட்டத் திட்டங்கள் இந்த மசோதாவில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.