புதுச்சேரி :

புதுச்சேரியை சேர்ந்த சேத்தூரில்  ஒரு நர்சரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரியை அடுத்த சேத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிபவர் பக்கிரிசாமி (வயது 42).  இவர் தனது பள்ளியில் நர்சரி வகுப்பில் படிக்கும் ஐந்து வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்துள்ளார்.   வீட்டுக்கு வந்ததும் அந்தச் சிறுமி தனது பெற்றோரிடம் இது பற்றி தெரிவித்துள்ளார்.   இந்த சம்பவம் நான்கு நாட்களுக்கு முன்பு ஆகஸ்ட் 18ஆம் தேதி நடந்துள்ளது.

அடுத்த நாள் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.   ஆனால் பள்ளி நிர்வாகி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் அந்த பள்ளி நிர்வாகிக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்பட்ட பெற்றோர் போலிசில் புகார் அளித்தனர்.   போலீசாரும் ஏதும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பெற்றோர்,  அக்கம் பக்கம் வசிப்பவர்களை அழைத்துக் கொண்டு நேற்று இரவு சாலை மறியலில் ஈடு பட்டனர்.

வடக்கு காரைக்கால் போலீஸ் அதிகாரி மாரிமுத்துவும் மற்ற அதிகாரிகளும் மறியல் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.   அதன் பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

பக்கிரிசாமியை நேற்று இரவு மறியலுக்குப் பின் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.