திருவனந்தபுரம்:

பிரபல கிரிக்கெட் வீரர் விராட்கோலி, பிரதமர் மோடி,டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா போன்றோருக்கு தான் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டு டேக் செய்திருந்தார்.

இதற்கு பிரதமர் மோடி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிடுவதாக பதில் தெரிவித்தி ருந்தார்.  அதற்கு  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்துங்கள் என்று மோடிக்கு சவால் விடுத்திருந்தார்.

இதை வலியுறுத்தும் விதத்தில் திருவனந்தபுரத்தில் இளைஞர் காங்கிரசார் உடற்பயிற்சி செய்வது போன்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

மோடியின் உடற்பயிற்சி சவால் குறித்து,  இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், விராட் கோலியின் உடற்பயிற்சி சவாலை ஏற்றதற்கு மகிழ்ச்சி. இப்போது என்னிடம் ஒரு சவால் உள்ளது: எரிபொருள் விலையை குறையுங்கள் அல்லது காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டத்தை செய்வதோடு, உங்களை அவ்வாறு செய்ய கட்டாயப்படுத்தும். உங்கள் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்., என ராகுல் காந்தி கூறியிருந்தார்.

இந்த நிலையில், திருவனந்தபுரத்தில், கேரள இளைஞர் காங்கிரசார் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அங்குள்ள  பெட்ரோல் நிலையம் முன்பு, தாங்கள் உடற்பயிற்சி செய்வது போன்று புஷ்அப் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

மீபத்தில், மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும். அதனால் அனை வரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று  விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டேக் செய்திருந்தார்.

இதையடுத்து, ரத்தோரின் சவாலை ஏற்றுக்கொண்ட கோலி, தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு டேக் செய்தது குறிப்பிடத்தக்கது.