டீசல் விலை உயர்வு : ராமேஸ்வரத்தில் 14 நாட்களாகத் தொடரும் மீனவர் போராட்டம்

Must read

ராமேஸ்வரம்

டீசல் விலை உயர்வை எதிர்த்து ராமேஸ்வரத்தில் கடந்த 14 நாட்களாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தினமும் சுமார் 2000க்கும் அதிகமான மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க செல்கின்றனர்.  இங்கு நேரடியாக 10000க்கும் மேற்பட்டோரும் மறைமுகமாக சுமார் 20000க்கும் அதிகமானோரும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.  இங்குள்ள படகுகள் டீசலில் இயங்குபவை ஆகும்.

தற்போது டீசல் விலை தினசரி உயர்ந்து வருகிறது.  இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.   இதையொட்டி ராமேஸ்வரம் மீனவர்கள் மத்திய மாநில அரசுகளின் கொள்முதல் விலைக்கு டீசலை வழங்கவும் மீன்களுக்கு உரிய விலை வழங்கவும் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்கள்14 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட படகுகள் நங்கூரம் இட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  இதனால் சுமார் ரூ.28 கோடி வரை வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

More articles

Latest article