மீனவர்கள் சிறைபிடிப்பு: புதுக்கோட்டை மீனவர்கள் வேலைநிறுத்தம்!

புதுக்கோட்டை,

மிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படுவதை கண்டித்து புதுக்கோட்டையில் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று புதுக்கோட்டை மற்றும் அந்த பகுதியை சேர்ந்த 41 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் கைது செய்ததை கண்டித்து புதுக்கோட்டை மீனவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தத்தில் புதுக்கோட்டை,  கோட்டைபட்டினம், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறத்த போராடடத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரில் தொடர் தாக்குதல் மற்றும் கைது செய்யப்படுவதை கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரியும், மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள்  5,000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலை நிறுத்தத்தையொட்டி புதுக்கோட்டையை சேர்ந்த 550 விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் கடற்கரை யோரம் நிறுத்தப்பட்டுள்ளன.
English Summary
Fishermen arrested: Pudukottai fishermen strike against srilanka navy