சென்னை:
வீடியோ கால் மூலம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் ஒருவர் புகார் அளித்தார். அவரிடம் காவல் ஆணையர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக சென்னை மாநகர காவல்ஆணையராளக இருந்துவந்த ஏ.கே.விஸ்வநாதன், மாற்றப்பட்டு மாநில அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, சென்னைக்கு புதிய காவல் ஆணையராக அமலாக்கப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார்.
சென்னை மாநகர 107வது கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நேறு பொறுப்பேற்றதும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, கொரோனா காலம் என்பதால் பொதுமக்கள் நேரில் வந்து புகார் அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தினமும் அல்லது வாரம் இருமுறை நேரடியாக என்னிடம் வீடியோ கால் மூலம் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்து, அதற்கான 6369100100 என்ற வாட்ஸ்அப் எண்ணையும் (WhatsApp number 6369100100) அறிவித்தார்.
இந்த நிலையில், காவல் ஆணையரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒருவர் காணொளி மூலம் புகார் அளித்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.