நியூயார்க்: திருவள்ளுவருக்கு பெரும் சேர்க்கும் வகையில் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு ‘வள்ளுவர் தெரு’ என பெயரிட்டு கவுரவப்படுத்தப்பட்டுள்ளது.  இது உலகி அரங்கில் தமிழனின் பெருமை மேலும் பறைசாற்றி உள்ளது.

உலக பொதுமறையான திருக்குறள் உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுபோல திருக்குறளை எழுதிய திருவள்ளுவரும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் போற்றப்படுகிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் முதன்முறையாக சாலை ஒன்றிற்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட உள்ளது.  அங்குள்ள விர்ஜினியா மாகாணத்தில் உள்ள பேர்பேக்ஸ் பகுதியில் இருக்கும் சாலை ஒன்றுக்கு  வள்ளுவர் தெரு (Valluvar Way) என்று பெயரிடப்பட உள்ளது.

இந்த அறிவிப்பை வெர்ஜினியா சபை உறுப்பினர் டான் ஹெல்மர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.  திருவள்ளுவரின் திருக்குறள் புகழ் உலகப் புகழ்பெற்ற இருந்தாலும் அவரது பெயரில் அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு தெரு அழைக்கப்பட இருப்பது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது.