விசாகப்பட்டினம்:

நாட்டிலேயே முதன்முறையாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், பொதுமக்களின் புகார்களை பதிவு செய்ய ரோபோ பணியமர்த்தப்பட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மஹாராணிப்பேட்டை காவல் நிலையத்தில் முதல் முறையாக பொதுமக்களின் புகார்களை பதிவு செய்யும் சைபீரா எனும் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரோபோ குறித்து கூறிய தயாரிப்பு நிறுவன அதிகாரி,  பிரவீன் மல்லா கூறுகையில், இந்த ரோபோவில், 360 டிகிரியிலும் படம் பிடிக்கும் வகையில், 13 கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார். அதனுடன் இணைக்கப்பட்ட மடிக்கணினியில் குரல் பதிவு அல்லது கீயிங் மூலம் புகார்களைப் பெறலாம் என்று கூறினார்.

இந்த ரோபோ “புகாரை பதிவு செய்து, அடுத்த  24 மணி நேரத்திற்குள் புகார்தாரர் மற்றும் விசாரணை அதிகாரி யிடம் ஒப்புதல் அளிக்கும் என்றும்,  ஒவ்வொரு புகாருக்கும் தீர்வு காண அதிகபட்சம் மூன்று நாட்கள் காலக்கெடு இருக்கும் என்று தெரிவித்து உள்ளார். புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், 24 மணி நேரத்திற்கு ஒரு முறை உயரதிகாரிகளுக்கு நினைவூட்டல் செய்தி அனுப்பும் வகையில் ரோபோ வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும்,

இந்த ரோபோவில் ஏற்கனவே பழைய குற்றவாளிகள் குறித்து பதிவேற்றப்பட்டுள்ளதால்,  பழைய குற்றவாளி களை கண்டால், கட்டுப்பாட்டு அறைக்கு சைபீரா செய்தி அனுப்பும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த ரோபோவை தயாரித்துள்ள, ரோபோ கபிலர் பிரைவேட் லிமிடெட் குழுவின் உறுப்பினர் தினேஷ் குமார் கூறும்போது,  “இது ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ரோபோ என்றவர்,  “காவல் நிலையங்களில் பணிபுரியும்  போலீசார் மற்றும் பணியாளர்கள் மிகுந்த அழுத்தத்தின் கீழ் இருக்கிறார்கள், எனவே இந்த ரோபோ அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் உதவும், மேலும் நேர சிக்கலும் குறைக்கப்படும். இந்த ரோபோ முழு மின்-நிர்வாக முறையையும் கண்காணிக்க முடியும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் சகாப்தத்தில் தேவைப்படுகிறது, “என்று அவர் கூறினார்.

இந்த ரோபோவின் அடிப்படைக் கருத்து என்னவென்றால், அதனால்,  புகாரைப் பதிவுசெய்ய முடியும் மற்றும் தானாகவே புகார் துறைத் தலைவருக்கு அந்த புகார் குறித்து அனுப்பி வைக்கும் என்றும், இதனால்  குறைந்தபட்ச காலத்திற்குள் பிரச்சினையை தீர்க்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும்,  “புகார் தீர்க்கப்படாவிட்டால், புகார்  குறித்த உயர் அதிகாரிகளுக்கும், அவர்களும்  பிரச்சினையை தீர்க்கத் தவறினால், முதலமைச்சர் அலுவலகத்திற்கு (சி.எம்.ஓ) அனுப்பும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது துணை போலீஸ் கமிஷனர் (மண்டலம் I) மீனா, மற்றும் ரோபோ தயாரித்த  ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரவீன் மல்லா உள்ளிட்ட பலர் காவல் நிலையத்தில் இருந்தனர்.