டில்லி:
கடந்த ஆண்டுகளை விட இந்தஆண்டு வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது. 2018-2019 நிதியாண்டில் இந்தியாவில் 6.68 கோடி நபர்கள் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இது கடந்த நிதியாண்டை விட குறைவானது.
கடந்த 2017-2018 நிதியாண்டில் 6.7 கோடிபேர் வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த ஆண்டு அது குறைந்து 6.68 கோடி பேர் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மோடி அரசின் பணமதிப்பிழக்கு நடவடிக்கைக்கு பிறகு, வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்து வந்த நிலையில், 2018-2019ம் நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதற்கு காரணமாக, நடப்பு நிதியாண்டில் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு வரி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதால் வரும் ஆண்டு முதல் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை மட்டுமில்லாமல் நேரடி வரி வசூலும் குறையும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், வருமான வரி செலுத் துவோரின் எண்ணிக்கையும் குறைந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த குறைவானது இந்திய வரலாற்றில் முதல் முறை என்று கூறப்படுகிறது. ஆண்டுக்கு ஆண்டு வருமான வரி அதிகரித்து வரும் நிலையில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2018-2019 நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.