சென்னை

ன்று சென்னையில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.40000 ஐ தாண்டி உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாகப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலையும் சரிந்து வருகிறது

இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

ஆகவே தொடர்ந்து தங்கம் தினந்தோறும் விலை உயர்ந்து வருகிறது.

இன்று காலை ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.74 உயர்ந்தது

இன்று மாலை சென்னையில்  ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.109 அதிகரித்து  ரூ,5019க்கு விற்கப்பட்டது.

அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.40104 ஆகி உள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.40000 ஐ தாண்டி உள்ளது.

வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 4 அதிகரித்து கிலோவுக்கு ரூ. 4000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.70,900க்கு விற்பனை ஆகிறது.