சென்னை

டந்த 130 ஆண்டுகளில் முதல்முறையாக மார்ச் மாதத்தில் தமிழகத்தை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தற்போது தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.

இதனால் எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் தூர முன்னறிவிப்பு குறியீடு ஆன 1 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த மண்டலம் கடந்த 130 வருட வானிலை வரலாற்றில் இல்லாத படி மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டை நெருங்கும்  முதல் காற்றழுத்த மண்டலம் ஆகும்.  ஏற்கனவே 1938 ஆம் வருடம் இலங்கையிலும் 1994 இல் அந்தமானிலும் மார்ச் மாதத்தில் இது போல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கி உள்ளது.