டெல்லி: முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை  என மத்திய  நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. முதல் முறை வங்கிக்கடன் பெரும் நபர்களுக்கு சிபில் ஸ்கோர் ‘0’ அல்லது குறைவாக இருக்கும் காரணத்தை காட்டி, அவர்களுக்கு வங்கிக்கடன் வழங்க மறுக்கக்கூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்தல்.

கடன் விண்ணப்பங்களில் CIBIL-ன் பங்கை நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது, முதல் முறையாக கடன் வாங்குபவர்களுக்கு கடன் மதிப்பெண்கள் கட்டாயமில்லை என்று கூறியுள்ளது. மேலும், உங்கள் CIBIL மதிப்பெண்ணை மட்டுமே தீர்மானிப்பவராக வைத்திருக்காமல், பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தனிப்பட்ட விண்ணப்பங்களை வங்கிகள் அங்கீகரிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பான  நாடாளுமன்ற மழைக்கால கூட்டதத்தொடர்  மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது,  பேசிய மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ரிசர்வ் வங்கியின் (RBI) நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். அதன் படி, கடன் வரலாறு இல்லாத அல்லது சிபில் மதிப்பெண் குறைவாக உள்ள காரணத்திற்காக, முதன்முறையாக கடன் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை வங்கிகள் நிராகரிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது என்றவர்,  இது வங்கியின் வளர்ச்சியில் புதிய மைல்கல் என்றார்.

இந்திய ரிசர்வ் வங்கி 6.1.2025 தேதியிட்ட உத்தரவின் மூலம், கடன் தகவல் நிறுவனங்களுக்கு (CICs), முதன்முறையாக கடன் வாங்குபவர்களின் விண்ணப்பங்களை, கடன் வரலாறு இல்லை என்பதற்காக நிராகரிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.  சிபில் மதிப்பெண் கட்டாயமில்லை என்றாலும், வங்கிகள் தங்கள் வழக்கமான சரிபார்ப்புகளை நடத்துவது அவசியம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சரிபார்ப்புகளில், விண்ணப்பதாரரின் கடந்தகால கடன் வரலாறு, கடனைத் திருப்பிச் செலுத்திய விதம், ஏதேனும் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதா அல்லது மறுசீரமைக்கப்பட்டதா போன்ற விவரங்கள் அடங்கும். ஒருவரின் கடன் தகவல் அறிக்கையில் உள்ள தகவல்கள், ஒருவருக்கு கடன் வழங்குவதற்கு முன் வங்கிகள் பரிசீலனை செய்யும் பல்வேறு காரணிகளில் ஒன்றாக இருக்கும் என்றும்  என்று ம் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இதையடுத்து, முதல் முறையாக கடன் வாங்குபவர்களுக்கு கடன் மதிப்பெண்கள் கட்டாயமில்லை என்று கூறியுள்ளது. மேலும், உங்கள் CIBIL மதிப்பெண்ணை மட்டுமே தீர்மானிப்பவராக வைத்திருக்காமல், பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தனிப்பட்ட விண்ணப்பங்களை வங்கிகள் அங்கீகரிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளது.

சிபில் ஸ்கோர் என்றால் என்ன?

சிபில் மதிப்பெண் என்பது 300 முதல் 900 வரையிலான ஒரு மூன்று இலக்க எண்ணாகும். இது ஒருவரின் “கடன் தகுதியை” சுருக்கமாகக் குறிக்கிறது. தனிநபர் கடன், வீட்டுக் கடன் அல்லது பிற வங்கிக் கடன்களைப் பெற ஒருவரின் தகுதியைத் தீர்மானிக்க இந்த மதிப்பெண் பயன்படுத்தப்படுகிறது.

 சிபில் மதிப்பெண்ணைப் பெறுவதற்கு வங்கிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் பரவலாக ஒரு கருத்து உள்ளது. ஆனால், அமைச்சர் சவுத்ரி, கடன் தகவல் நிறுவனங்கள், ஒரு நபரின் கடன் அறிக்கையை வழங்குவதற்கு ரூ.100-க்கு மேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கூறினார். மேலும், ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையின்படி, ஒவ்வொரு தனிநபருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை, இலவச முழு கடன் அறிக்கையை மின்னணு வடிவில் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.