டில்லி
டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் முதல் முறையாக ஒரு பெண் துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
டில்லியில் அமைந்துள்ள ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழகம் என்பது சிறுபான்மையினரால் நடத்தப்படும் பல்கலைக் கழகமாகும். இந்த பல்கலைக் கழகம் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் பல்கலைக்கழகமாகும்.
பொதுவாக இந்த இஸ்லாமிய பல்கலைக் கழகங்கத்தில் துணை வேந்தர்களாக ஆண்களே நியமிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய பல்கலைக்கழக இயக்குனர் சுபோத் குமார் கில்டில்யால் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேராசிரியை நஜ்மா அக்தரை இந்த பல்கலைக் கழக துணை வேந்தராக நியமித்துள்ளதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் பேராசிரியை நஜ்மா அக்தர் இந்த பல்கலைக் கழகத்தின் முதல் பெண் துணை வேந்தர் என்னும் சிறப்பை பெற்றுள்ளார்