ஆண்டிகுவா: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில், 13 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள விண்டீஸ் அணி, இலங்கையைவிட 156 ரன்கள் பின்தங்கியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, தனது முதல் இன்னிங்ஸில் 169 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து, முதல் நாளிலேயே தனது முதல் இன்னிங்ஸையும் துவக்கியது விண்டீஸ் அணி.

ஆனால், மொத்தம் 13 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், வெறும் 13 ரன்களை மட்டுமே, (1 ஓவருக்கு 1 ரன் என்ற கணக்கில்) எடுத்தது அந்த அணி. அதேசமயம் விக்கெட் எதையும் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அணியின் பிராத்வெயிட் 36 பந்துகளை சந்தித்து 3 ரன்களையும், ஜான் கேம்ப்பெல் 44 பந்துகளை சந்தித்து 7 ரன்களையும் எடுத்து களத்தில் உள்ளனர்.

 

 

[youtube-feed feed=1]