பெர்த்:
தென் ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 177 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா அணி.
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வாகா ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரே லியாவை வீழ்த்த தென்ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது.
முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து களத்தில் இறங்கியது. மொத்தம் 242 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, மொத்தம் 244 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இதனை தொடர்ந்து 2 வது இன்னிங்சில் விளையாடி தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்களை இழந்து 540 ரன்களை குவித்து, ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
541 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 361 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
தென்ஆப்பிரிக்க அணியினிரின் அதிரடி பச்சு வீச்சில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஒவ்வொருவராக வெளியேறினர்.
இதையடுத்து 177 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்ஆப்பரிக்கா முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி வாகை சூடியது.
தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் காகிஸோ ரபடா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தி, வெற்றியை உறுதி செய்தார்.
இந்த போட்டியின் மேன் ஆப்தி மேட்சாக காகிஸோ ரபடா அறிவிக்கப்பட்டார்.
Patrikai.com official YouTube Channel