அமெரிக்க ஜனநாயக கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு தெற்கு கரோலினா மாகாணத்தில் நுழைய கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தெற்கு கரோலினா மாகாண உறுப்பினர் ஜான் கிங், டொனால்டு ட்ரம்ப் தனது அருவருக்கத்தக்க வெறுப்பான பேச்சுமற்றும் நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவுக்கே அவமானத்தை உண்டாக்கும் விதத்தில் நடந்து வருகிறார். அவரது கட்சியை சேர்ந்தவர்களே அவரை வெறுக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது
நமது முன்னோர்களின் கனவு மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் மாண்பு ஆகியவற்றுக்கு விரோதமாகவே அவரது நடவடிக்கைகள் அனைத்தும் அமைந்துள்ளன. அவர்மீது மட்டுமன்றி அவரது குடியரசு கட்சியினர் மீதும் மக்களுக்கு வெறுப்பு உண்டாகும் அளவுக்கு அவர் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் அமைந்துள்ளன. எனவே டொனால்டு ட்ரம்பை தெற்கு கரோலினா மாகாணத்துக்குள்ளெயே அனுமதிக்கக் கூடாது என்று ஜான் கிங் குறிப்பிட்டுள்ளார்.