சென்னை:

புத்தாண்டின் முதல் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், சட்ட மன்ற கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற வருமாறு, சட்டமன்ற சபாநாயகர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.

2020ம் ஆண்டின் தமிழக சட்டமன்ற முதல் கூட்டத்தொடர்  நாளை (ஜனவரி 6-ம்) காலை 10 மணிக்கு கூடுகிறது. புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேரவையில் உரை நிகழ்த்த உள்ளார்.

இந்த நிலையில்,  மரபுப்படி  கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக சபாநாயகர் தனபால் நேரில் சந்தித்து பேசினார். அப்போது சட்டசபையில் உரை நிகழ்த்த வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார்.