சென்னை:

சென்னையில் கொரோனாவுக்கு முதன்முறையாக  காவல் அதிகாரி ஒருவர் பலியாகி உள்ளார்.  இது காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு பணியில்  காவல்துறையினரும் பணியாற்றி வருவதால், அவர்களுக்கும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை நாடு முழுவதும்  7ஆயிரத்துக்கும் மேற்பட் காவல் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புகள் அதிகபட்சமாக  மகாராஷ்டிரா மாநிலத்தில்  3000க்கும் மேற்பட்டோரும், டெல்லியில் 700க்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் 550க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 47 வயது மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் முரளி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  நிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு  பலியான முதல் காவல் அதிகாரி  இவர் என்பது குறிப்பிடத்தக்கது.