ஹாதியா

தெலுங்கானாவில் இருந்து கிளம்பிய வெளி மாநில தொழிலாளர்களுக்கான முதல் இடைநில்லா ரயில் ஜார்க்கனட் மாநிலம் ஹாதியா ரயில் நிலையம் வந்தது.

ஊரடங்கு காரணமாக ஆயிரக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல இயலாமல் இருந்தனர்.  போக்குவரத்து தடையால் அவர்கள் தங்கி இருந்த மாநிலங்களில் உணவுக்கும் வழி இன்றி பலர் சிக்கி இருந்தனர்.  அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதன் அடிப்படையில் மாநில அரசுகள் மற்ற மாநில அரசுகளுடன் பேசி தங்கள்  மாநிலங்களில் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறது.  இவர்களுக்காக இடைநில்லா ரயில் வசதியை இந்திய ரயில்வே மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஏற்பாடு செய்துள்ளது.

இதுவரை 5 ரயில்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கி உள்ளன.

அவை

லிங்கம்பள்ளி – ஹாடியா,

ஆலுவா – புவனேஸ்வர்,

நாசிக் – போபால்,

ஜெய்ப்பூர் – பாட்னா,

கோடா – ஹாதியா 

ஆகியவை ஆகும்.

இதில் முதல் ரயிலான தெலுங்கானா லிங்கம்பள்ளியில் இருந்து ஜார்க்கண்ட் மாநில ஹாதியா ரயில் ஹாதியா ரயில் நிலையத்தை வந்தடைந்தது.   அங்குப் பயணிகளை ஜார்க்கண்ட் அரசாங்கம் மற்றும் இந்திய ரயில்வே அமைச்சக ஊழியர்கள் சோதனைக்குப் பிறகு வெளியே அனுப்பி உள்ளனர்.

இந்த காட்சி வீடியோ பதிவாகி உள்ளது.

[youtube https://www.youtube.com/watch?v=8gXDV_u8xXw]