மலப்புரம்,
இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரே, இமாம் ஆக பள்ளிவாசலில் தொழுகையை நடத்தி சாதனை படைத்துள்ளதுள்ளார். இது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு ஒருசில இஸ்லாமிய அமைப்புகள் கண்டனமும் தெரிவித்து உள்ளன.
இஸ்லாமிய மார்க்கத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. இதன் காரணமாக அவர்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பர்தா அணியவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் வசித்து வரும், குரான் சுன்னத் சொசைட்டி ( Quran Sunnath Society) என்ற அமைப்பின் பொதுச்செயலாளராக இருக்கும், ஜாமிதா என்ற 34வயதான இளம்பெண் ஆண்களுக்கு இணையாக இமாமாக பள்ளிவாசல் சென்று தொழுகை நடத்தினார். இது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஜாமிதாவின் இந்த செயலுக்கு ஒருசில இஸ்லாமிய அமைப்புகள் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து கூறிய ஜாமிதா, “குர்ஆன் பெண்களுக்கு எதிராக பாகுபாடு காண்பிக்கவில்லை என்றும், இமாமாக இருந்J தொழுகையை பெண்கள் நடத்தக்கூடாது என்று குரானில் ஏதும் இல்லை” என்றார்.
தனது இந்த செயலுக்கு பலர் பாராட்டுக்கள் தெரிவித்ததாகவும், இதுபோன்ற அச்சுறுத்தல்களை சமாளிப்பேன் என்றும் கூறினார்.