தர்மபுரி:
ர்மபுரி மலை கிராமமான வத்தல்மலைக்கு முதன்முறையாக பொது போக்குவரத்து சேவை துவங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், முதலமைச்சர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமமான வத்தல்மலைக்கு முதன்முறையாக பொது போக்குவரத்து சேவை நேற்று தொடங்கப்பட்டது.

இதுபோன்ற செயல்களைச் செய்ய ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தால், அந்த மகிழ்ச்சியான முகங்களைப் பார்க்கும்போது அது மிகுந்த திருப்தியைத் தருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.