டெல்லி: நாடு முழுவதும் மூன்று புதிய கிரிமினல் சட்டங்கள் இன்று அமலுக்கு வந்துள்ள நிலையில், அதில் ஒரு சட்டத்தின் கீழ் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. புதிய சட்டத்தின்கீழ் பதியப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.

நாடு முழுவதும் இன்று முதல் (ஜூலை 1) பாரதிய நியாய சன்ஹிதா, பிஎன்எஸ்எஸ் எனப்படும் பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பிஎஸ்ஏ எனப்படும் பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்த நிலையில்,  புதிய தண்டனைச் சட்டமான  பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் தெரு வியாபாரிக்கு எதிராக டெல்லியில் முதல் வழக்கு  பதிவு செய்யப்பட்டு உள்ளது.  டெல்லி ரயில் நிலையத்தின்  மேம்பாலத்தின்  கீழ் சாலையில் வியாபாரம் செய்துகொண்டிருந்த சாலை வியாபாரி மீது,  பொதுமக்ளுக்கு தடை ஏற்படுத்திய வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  BNS இன் பிரிவு 285 இன் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள கமலா மார்க்கெட் காவல் நிலையத்தில்  இந்த  பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ANI தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இன்று முதல் அமலானது 3 புதிய குற்றவியல் சட்டங்கள்…