ந்தியாவில் கொரோனா என்ற வைரஸ் முதலில் அறிமுகமான ஸ்தலம்- கேரளம்.
சரியாக 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா, அந்த மாநிலத்தில் தான் நாட்டிலேயே முதன் முறையாக கண்டறியப்பட்டது.
சீனா நாட்டில் உள்ள ஊகானுக்கு மருத்துவம் படிக்க சென்ற மாணவி அப்போது தான் கேரளா திரும்பி இருந்தார்.
புத்தகங்களோடு அந்த மாணவி கொரோனா கிருமியை சுமந்து வந்திருப்பது கண்டறிப்பட்ட தினம்-
30- 01- 2020.

இரண்டாவது மற்றும் மூன்றாவது நோயாளிகளும் கூட ஊகானில் இருந்து கேரளா வந்தவர்கள் தான்.
ஆம்.
அவர்கள் மூவருமே, கொரோனா விஷச்செடி முளைத்த விளைநிலத்தில் இருந்தே, அதனை கொண்டு வந்திருந்தனர்.
மூவருமே இன்று குணமாகி நல்ல நிலையில் இருக்க-
நேற்று வரைக்கும் கொரோனாவுக்கு அந்த மாநிலம் 70 பேரை பறி கொடுத்துள்ளது.
பாதித்தோர் எண்ணிக்கை- 22, 303.
கேரளாவில் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாளில் இருந்து 10 ஆயிரம் நோயாளிகளை அந்த மாநிலம் எட்ட 168 நாட்கள் பிடித்தது. ( 30- 01-20 முதல் 16-07-20 வரை)
ஆனால் அடுத்த 11 நாட்களில் அந்த எண்ணிக்கை இரண்டு மடங்கு ( 20 ஆயிரம்) அதிகரித்து கேரளாவை அதிற வைத்துள்ளது.
வெளியூருக்கு வேலைக்கு சென்றவர்கள், திரும்பி வந்திருப்பதே, அந்த மாநிலத்தில் கொரோனா விசுவரூபம் எடுத்திருப்பதற்கு பிரதான காரணம்.
ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட பின், கேரளாவுக்கு வந்த சொந்த ஊர் காரர்கள் எண்ணிக்கை என்ன தெரியுமா?
6, 82, 699.
இவர்களில் சுமார் 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் வெளி மாநிலங்களில் இருந்தும், சுமார் 2 லட்சத்து 62 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள் ஆவர்.
-பா.பாரதி.