சிவகாசி:
பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பட்டாசுக்கான வரி குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.
பட்டாசு தயாரிப்பு தொழிலுக்கு 28 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 5 நாளாக ஆலைகளை மூடி பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி வரி முறையில், பட்டாசுகளுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனை குறைக்க மத்திய, மாநில அரசுகளிடம் பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
இதுதொடர்பாக கடந்த ஜூன் 26ம் தேதி, சிவகாசியில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், பட்டாசு களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து, ஜூன் 30 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசு உறுதியளித்ததை தொடர்ந்து, பட்டாசு ஆலை போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.