டில்லி:
தலைநகர் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியின் தென்பகுதியில் உள்ள அன்சாரி நகரில் பிரபலமான எய்ம்ஸ் மருத்துவமனை. இங்குள்ள அவசர சிகிச்சை அரங்கில் திடீரென தீப்படித்தது. இதையடுத்து தீ பரவி அவசர சிகிச்சை பிரிவு வரை சென்றது. இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
இந்த தீ விபத்து இன்று மாலை 6.12 மணிக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயைணப்பு வீரர்கள் உடடினயாக தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்து உள்ளார். தீயின் காரணமாக ஏற்பட்ட புகை மூட்டம் மேல் தளத்தில் உள்ள நோயாளிகள் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் கூறி உள்ளார்.
இதுவரை யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.