சென்னை: சென்னையின் பிரதான பகுதியான அண்ணாசாலை அருகே அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாநகரத்தன் இதயப்பகுதியாக திகழ்வது அண்ணாசாலை. இங்கு ஏராளமான தியேட்டர்கள் உள்ளன. பிரபலமான தேவி, தேவி பாரடைஸ் போன்ற தியேட்டர்கள் அமைந்திருக்கும் பகுதியில் நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு சொந்தமான சாந்தி தியேட்டரும் உள்ளது. இதன் அருகே உள்ள தனியார் நிறுவன அடுக்குமாடி கட்டித்தில் இன்று முற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாசாலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். . 4 வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கட்டடத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை ராட்சத கிரேன் மூலம் தீயணைப்புத் துறையினர் மீட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.