
மும்பை
மும்பை பெஹ்ராம்படா ரெயில் நிலையத்தில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்படுள்ளது.
மும்பை பாந்த்ரா அருகே உள்ளது பெஹ்ராம்படா ரெயில் நிலையம் இங்கு இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டு ரெயில் நிலையம் முழுவதும் தீ பரவி வருகின்றது. ரெயில் நிலையத்தின் அருகில் நிறைய குடிசைகள் உள்ளன. அங்கும் தீ பரவி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடை மேடை முழுவதும் பற்றி எரிவதாக செய்திகள் வந்துள்ளன.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். 16 தீயணைப்பு வாகனங்களும், 12 நீர்த்தொட்டிகளும் எடுத்து வரப்பட்டுள்ளன. இது வரை உயிர்ச் சேதம் பற்றிய தகவல்கள் எதுவும் வரவில்லை.
Patrikai.com official YouTube Channel