டில்லி: 

டில்லியில் உள்ள மத்தியஅரசு அலுவலகமான சாஸ்திரி பவனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது. ஊழியர்கள் அலறியடித்து அறையை விட்டு வெளியேறினர்.

இன்று மதியம் சுமார் 1.12 மணி அளவில் சாஸ்திரி பவனில் உள்ள தரைத் தளத்தில் உள்ள அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து உடடினயாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு துறையினர்5 தீயணைப்பு வாகனங்களில்  விரைந்து வந்து தீயை அணைத்து நிலமையை கட்டுக்கொண்டு வந்தனர். இந்த திடீர் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீவிபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏசி பெட்டியில் மின்சாரம் கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.