சென்னை,
தீவிபத்துக்கு உள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடம் நேற்று மாலையே இடிக்கப்படும் என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.
கடந்த 3 நாட்களாக உஸ்மாலை சாலை பகுதிகளில் கடைகள் மூடப்பட்டும், போக்குவரத்து நிறுத்தப்பட்டும் இருப்பதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில், தீவிபத்து காரணமாக பாதிப்படைந்துள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடம் இன்றாவது இடிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 7 அடுக்குகளை கொண்ட அந்தக் கட்டடம் எலும்புக்கூடானது. கட்டடத்தின் பெரும்பாலன பகுதிகள் உறுதித் தன்மையை இழந்து இடிந்து விழுந்தது.
அதை ஆய்வு செய்த அதிகாரிகள் உடனடியாக கட்டிடத்தை இடிக்க முடிவு செய்து, அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டனர்.
ஆனால், இன்னும் கட்டிடத்தின் உள்பகுதிகளின் சில இடங்களில் தீ பிடித்து அவ்வப்போது எரிந்து வருவதாலும், கட்டித்துக்குள் செய்யப்பட்டுள்ள வயரிங் மற்றும் ஏசி டக் போன்றவற்றை அகற்றி னால்தான் கட்டிடத்தை இடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் கட்டடத்தை இடிக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை யிலேயே கட்டடத்தை இடிப்பதற்கான ஆயத்தப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக சென்னை சில்க்ஸின் பின்புறம் ரப்பீஸ் எனும் கட்டட இடிபாடுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
கட்டடத்தை இடிப்பதற்காக அப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகள் கடந்த சில நாட்க ளாக மூடப்பட்டுள்ளன. இன்று கடையின் உள்பகுதியில் உள்ள மின்சார வயர்கள் அனைத்தும் அகற்றப்பட்டால் மட்டுமே கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கும் என கூறப்படுகிறது.
கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கி 3 நாட்களுக்குள் கட்டிடம் முழுவதும் இடிக்கப்பட்டு, இடிபாடுகள் உடனடியாக அகற்றப்படும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.