
அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் எஃப்.ஐ.ஆர். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
கருணாகரன் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்தின் இசையில் உருவாகும் எஃப்.ஐ.ஆர் படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார்.
கடந்த ஆண்டின் இறுதியில் எஃப்.ஐ.ஆர் பட டப்பிங் பணிகளை முறையான பாதுகாப்புடன் நிறைவு செய்தார் விஷ்ணு. ஒருபுறம் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இர்ஃபான் அஹ்மத் என்ற பாத்திரத்தில் நடிக்கிறார் விஷ்ணு.
இந்நிலையில் விழியிலே பாடலின் லிரிக் வீடியோ பாடல் வெளியானது. சத்ய பிரகாஷ், மஹிதா, சுகந்த் பாடிய இந்த பாடல் வரிகளை பகவதி PK எழுதியுள்ளார்.
[youtube-feed feed=1]