சென்னை,

ஸ்.ஆர்.எம்.பச்சமுத்து மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து,  விசாரணை நடத்தி 8வாரத்திற்குள் விசாரணை அறிக்கை  தாக்கல் செய்ய சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவர் டெபாசிட் செய்துள்ள பணத்தை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு திருப்பி கொடுக்க முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி பால் வசந்தகுமார் தலைமையில் குழு அமைத்து பிரித்து கொடுக்கவும்  ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை சேர்க்க கோடிக்கணக்கில் பணம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைத்தொடர்ந்து, இதற்கு பாலமாக செயல்பட்டு வந்த   பச்சமுத்து வின் நெருங்கிய கூட்டாளி மதன் திடீரென்று மாயமானார்.

அவர், எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை காரணமாக  ஏராளமானோஎரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியிருப்பதாகவும், அந்தப் பணத்தை பச்சமுத்துவிடம் கொடுத்து விட்டதாகவும், கட்சிக்காக தேர்தல் செலவு செய்ததாகவும் கடிதம் எழுதி வைத்து விட்டு, தான் கங்கையில் சமாதி ஆகப்போவதாகவும் கடிதம் எழுதி வைத்து விட்டு திடீரென மாயமானார்.

SRM பச்சமுத்துவுடன் மதன்

மேலும், மாணவர்களிடம் வாங்கிய பணம் எஸ்ஆர்எம் பச்சமுத்து, ரவி பச்சமுத்துவிடம் இருப்பதாகவும் மதன் கூறியிருந்தார்.

அதையடுத்து கைது செய்யப்பட்ட பச்சமுத்து, தனக்கும் மதனுக்கும் சம்பந்தம் இல்லை என்ற கூறினார். இந்நிலையில் மருத்துவ சீட் கேட்டு பணம் கொடுத்திருந்த  பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மருத்துவ சீட் பெற்றுத் தருவதற்காக மாணவர்கள் மதனிடம் கொடுத்து இழந்ததாக கூறப்படும்  பணத்தை திருப்பி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பச்சமுத்து மகன் ரவி கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து  ரூ.85 கோடி பணம் சைதாப்பேட்டை கோர்ட்டில் டெபாசிட் செய்யப்பட்டது.

இதுகுறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, பச்சமுத்து டெபாசிட் செய்துள்ள ரூ.85 கோடியை மாணவர்களுக்கு பிரித்துக்கொடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த பணத்தை சரியாக பிரித்துக்கொடுக்க ஓய்வு பெற்ற ஜம்மு-காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பால்வசந்தகுமாரை ஆணையராக நியமித்து அவரது தலைமையில் குழு அமைக்கப்படுகிறது என்றும்,

அவர் மூலம்   பச்சமுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ள ரூ.85 கோடியை பாதிக்கப்பட்ட 136 மாணவர்களுக்கு 20ந்தேதிக்குள்  பிரித்துக்கொடுக்கும்படி கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் உரிய ஆதாரங்களைக் காட்டி அந்த தொகையை பெற்றுக் கொள்ள லாம் எனவும் உத்தரவிட்டது.

இக்குழுவுக்கு வேண்டிய உதவிகளை உயர் நீதிமன்றமும், காவல்துறையும் செய்து கொடுக்க வேண்டும். இதற்கான ஆணையரான முன்னாள் தலைமை நீதிபதி பால்வசந்த குமாருக்கு ரூ.5 லட்சத்தை பச்சமுத்து வழங்க வேண்டும்.

ரூ.85 கோடி பாதிக்கப்பட்டவர்களுக்கு பங்கிடப்பட்டது குறித்து இக்குழு வரும் 21-ம் தேதி நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.

இந்நிலையில் தன் மீதான பணமோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் பச்சமுத்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நடந்தது.

அப்போது,  ‘‘இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என நீதிபதி கூறினார்.

மேலும், இந்த வழக்கு காரணமாக பச்சமூத்து எப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்து முறையான விசாரணை  மேற்கொண்டு  8 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.