டில்லி:

பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் உத்தரபிரதேச மாநிலத்தில் சுரங்கத்துறை அமைச்சர் காயத்ரி பிரஜாபதி மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் அமைச்சர்சபையில் சுரங்கத்துறை அமைச்சர் பதவி வகிப்பவர் காயத்ரி பிரஜாபதி. இவர் 35 வயதான ஒரு பெண்ணை தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து  பலாத்காரப்படுத்தியதுடன், ஆபாசப்படங்கள் எடுத்துள்ளதாகவும், அந்த படங்களை வெளியிட்டுவிடுவதாக மிரட்டி தொடர்ந்து பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்தததாகவும் புகார் எழுந்தது.

பாதிக்கப்பட்ட பெண்மணி, தான் இது தொடர்பாக காவல்துறையில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்வில்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தை நாடினார்.

அப்பெண்மணி அளித்த மனு, மனு நீதிபதிகள் அர்ஜன் குமார் சிக்ரி, ஆர்.கே.அகர்வால் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் சார்பில் வழக்கறிஞர் மக்மூது பிரச்சா ஆஜராகி வாதாடினார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் காயத்ரி பிரஜாபதி உள்ளிட்டவர்கள் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்ய உத்தரபிரதேச மாநில காவல்துறையினருக்கு நீதிபதிகள்  உத்தரவிட்டனர்