நடிகை கஸ்தூரி மீது இருபிரிவு மக்களிடையே கலவரம் ஏற்படும் நோக்கத்தில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சென்னை எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிராமணர்கள் ஒடுக்கப்படுவதாகவும் பிராமணர்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனி சட்டம் வேண்டும் என வலியுறுத்தி சென்னை எழும்பூரில் 2 நாட்களுக்கு முன் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்து மக்கள் கட்சி சார்பில் நவம்பர் 3ம் தேதி அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி “அந்தப்புர பெண்களுக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள் தங்களை தமிழர்கள் என்று கூறலாமா ?” என்று கேள்வி எழுப்பினார்.

கஸ்தூரியின் இந்த பேச்சு சர்ச்சையானதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து தனக்கு கிடைத்த அறிவுரையை ஏற்று “அனைவரிடமும் இணக்கம் வேண்டி நான் தெலுங்கு குறித்து பேசிய குறிப்புகளை திரும்பப் பெறுகிறேன்” என்று திடீரென இன்று மாலை அறிக்கை வெளியிட்டார்.

அதேவேளையில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை எழும்பூர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட புகாரில், நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்பதாக இருந்தால் அதை நீதிமன்றத்தில் தெரிவிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பினர் கஸ்தூரி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளிக்கப்பட்டது.

இதனை ஏற்று,  மீது இருபிரிவு மக்களிடையே கலவரம் ஏற்படும் நோக்கத்தில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

“அனைவரிடமும் இணக்கம் வேண்டி நான் தெலுங்கு குறித்து பேசிய குறிப்புகளை திரும்பப் பெறுகிறேன்” நடிகை கஸ்தூரி அறிக்கை