பின்லாந்து பிரதமர் சன்னா மாரின் தன்னை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்திக்கொண்டார்.

2019 ம் ஆண்டு தனது 34 வது வயதில் பின்லாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட சன்னா மாரின் அந்நாட்டின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை பெற்றார், மேலும் பின்லாந்து நாட்டின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.

பிரதமர் என்ற பந்தா இல்லாமல் தொடை தெரிய கால் சட்டை அணிந்து செல்வது அவ்வப்போது கேளிக்கை விருந்துகளில் கலந்து கொள்வது என்று வலம் வந்த சன்னா மாரின் மீது சர்ச்சையும் தொடர்ந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனது நண்பர்களுடன் சேர்ந்து இரவு விருந்தில் கலந்து கொண்ட சன்னா மாரின் போதையில் குத்தாட்டம் ஆடியதோடு ஆண் நண்பருடன் நெருக்கமாக உறவாடிக்கொண்டிருந்தார்.

சன்னா மாரினின் இந்த நடவடிக்கைகள் அடங்கிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியானதை தொடர்ந்து எதிர்கட்சிகள் அவர் மீது புகார் கூறியது.

https://twitter.com/yin_sura/status/1560628223448432640

தவிர அவர் ஊக்கமருந்து அருந்தியதாகவும் கூறப்பட்டது, இந்த நிலையில், பிரதமர் சன்னா மாரின் தான் ஊக்கமருந்து அருந்தவில்லை என்று கூறியதுடன் அதற்கான பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த பரிசோதனை முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளிவரும் என்றும் அப்போது உண்மை தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும் தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான வீடியோ வெளியானது தனக்கு அதிர்ச்சியை அளிப்பதாகவும், அதற்காக தன்னை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்றும் சன்னா மாரின் கூறியுள்ளார்.