சென்னை: தமிழக நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடுமையான நிதி நெருக்கடி யிலும் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 2வது காகிதம் இல்லாத 2வது பட்ஜெட் என்ற பெருமை பெற்றுள்ளது.
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு, தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்து பட்ஜெட் குறித்து பேசினார்.
அப்போது, “இந்தாண்டு கொரோனா பெருந்தொற்று மூன்று அலைகள் மற்றும் வரலாறு காணாத பெருவெள்ளம் ஆகிய வற்றின் காரணமாக ஏற்பட்ட செலவினங்கள் அதிகம். எனினும் 7 ஆண்டுகளிக்கு பின்னர் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. கடுமையான நிதி நெருக்கடியிலும் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டு இருப்பதாக கூறிய வர், வருவாய் பற்றாக்குறையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் வரி வருவாய் 17%-க்கும் அதிகமாக இருக்கும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறியவர், பேராசிரியர் அன்பழகன் பெயரில் பள்ளி மேம்பாட்டு திட்டத்திற்கு ₨7,000 கோடி நிதி ஒதுக்கீடு தமிழ்வழி தனியார் பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் சிறந்த கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இல்லம் தேடி கல்விக்கு 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகள் குறிப்பாக அரசுப்பள்ளியில் படித்த 46% பேர் மட்டுமே கல்லூரி படிப்பிற்கு செல்கின்றனர். ஆகவே அந்த நிலையை அதிகப்படுத்த ஒரு புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கும் இந்த ஊக்க தொகை திட்டம் செல்லும். தற்போது 2ஆம் ஆண்டு கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் இந்தாண்டு ஊக்க தொகை வழங்கப்படும்.
அரசு பள்ளியில் 6-12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் இளநிலை கல்லூரி படிப்பில் சேரும் போது ஒவ்வொரு ஆண்டும் 1000 ரூபாய் வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் செய்யும் பொருட்களில் 5% சதவிகிதம் வரை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்ற புதிய விதியை கொண்டு வந்துள்ளோம்.
ஏற்றுமதியை ஊக்குவிக்க 100 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் பிரிவிற்கு வாய்ப்புகள் வர உள்ளது.
விட்டு வசதி வாரியத்தின் பழைய வீடுகளை மறுசீரமைப்பு செய்ய புதிய கொள்கை வர உள்ளது.
சிறுகுறு தொழில்களுக்கு சில முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
கடன் தள்ளுப்படி திட்டத்திற்கு 4131 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளோம்.
சென்னை சுற்றியிலுள்ள அவுட்டர் ரிங் சாலைகளில் வளர்ச்சிக்காக பயன்படுத்த சில திட்டங்களும் இந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலத்திட்டங்களுக்கு போதுமான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.