டெல்லி: ஜிஎஸ்டி வருவாயாக ரூ.95,380 கோடி அக்டோபர் மாதத்தில் வசூலாகி இருக்கிறது.
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி வருவாய் குறித்து மத்திய நிதியமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் அக்டோபர் மாதம் ஜிஎஸ்டியில் கிடைத்த வருவாய் எவ்வளவு விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
அதன் விவரம் வருமாறு: மத்திய ஜிஎஸ்டியாக ரூ.17,582 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.23,674 கோடியும் வசூலாகி இருக்கிறது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.45,517 கோடியும், செஸ் வாயிலாக 7,607 கோடியும் வசூலாகி உள்ளது.
கடந்த செப்டம்பரில் மத்திய அரசுக்கு கிடைத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.91,916 கோடி ஆகும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தைவிட இந்தாண்டு அக்டோபரில் 5.29% அளவு ஜிஎஸ்டி வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில் 1 லட்சத்து 710 கோடி ரூபாய் வசூலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.