சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில்,  2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். இதை மாநிலம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. முதல்நாள் அமர்வான இன்று வழக்கமான நடைமுறைகளுடன் அவை தொடங்கியதும்,  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. 2025-26ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்கிறார். இதையொட்டி, பட்ஜெட்டை முதல்வர் ஸ்டாலினிடம் காட்டி வாழ்த்து பெற்றார்,.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த பட்ஜெட்டில்,  அரசு ஊழியர்களுக்கான  ஓய்வூதியம் தொடர்லபான, அறிவிப்பு,  உரிமைத் தொகை பயனாளிகளின் எண்ணிக்கை உயர்வு, மகளிர் விடியல் பயண பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டப்பேரவையில் பட்ஜெட்  நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும், – 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில்,  சென்னை மாநகராட்சி பகுதிகளில் 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.