சென்னை: த தமிழ்நாடு சட்டப்பேரவையில்  இன்று இடைக்கால பட்ஜெட் மீது  நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிலுரை அளித்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டப்பேரவையை  புறக்கணித்தது. அதுபோல  பாஜக மற்றும் அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்களும் இன்று பேரவை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 17ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து, பட்ஜெட்மீதான விவாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில்,  பேரவையில்  இன்று இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை  வழங்குகிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.,

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  அதிமுக எம்எல்ஏக்கள்  அவைக்கு வராமல் புறக்கணித்துள்ளனர்.

இன்றைய  கூட்டத்தின் முதல் அலுவலாக 2026-27-ஆம் ஆண்டின் செலவுக்கான முன்பண மானிய கோரிக்கைகளை பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு முன்வைத்துள்ளார்., தொடர்ந்து, 2025-26-ஆம் நிதி ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் பேரவையில் அளிக்கப்படுகிறது.

இதையடுத்து,  இடைக்கால பொது நிதிநிலை அறிக்கை, இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதத்துக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோா் பதில் உரையாற்றுகின்றனர்.

தொடர்ந்து, 2025-26-ஆம் நிதி ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீது விவாதமின்றி பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும். அதையடுத்து, 2025-26-ஆம் நிதி ஆண்டின் கூடுதல் செலவின மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு அறிமுகம் செய்து, ஆய்வு செய்யப்பட்டு, விவாதமின்றி நிறைவேற்றப்படும்.

பின்னர் 2026-27-ஆம் நிதி ஆண்டுக்கான செலவின முன்பண மானிய கோரிக்கைகள் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படும். தொடர்ந்து, 2026-27-ஆம் நிதி ஆண்டின் செலவினத்துக்கான முன்பண மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு அறிமுகம் செய்து, ஆய்வு செய்யப்பட்டு, விவாதமின்றி நிறைவேற்றப்படும். அதையடுத்து அரசின் மசோதாக்கள் நிறைவேற்றப்படும்.

அனைத்து அலுவல்களும் முடிந்த பின்னர் பேரவை காலவரையறையின்றி பேரவைத் தலைவரால் ஒத்திவைக்கப்படும். இதனிடையே, இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை இன்று(பிப். 20) நடைபெறவுள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்துள்ளனர். அதேபோல, பாஜக மற்றும் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் சட்டப்பேரவைக்கு வரவில்லை.

[youtube-feed feed=1]