
சென்னை: ரோகித்தின் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியை, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது கோலியின் பெங்களூரு அணி.
கடைசிப் பந்துவரை நீண்ட இந்த ஆட்டம், பலரையும் நுனி இருக்கையில் அமரவைத்துவிட்டது. தொடக்கத்தில், எளிதான வெற்றியை பெங்களூரு ஈட்டும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அடுத்தடுத்து வீழ்ந்த 3 விக்கெட்டுகள் கதையை மாற்றின. ஆனாலும், டி வில்லியர்ஸ் களத்தில் நின்றார். இதனால் நம்பிக்கை இருந்தது. ஆனால், முக்கியமான கட்டத்தில் அவர் ரன்அவுட் ஆனார். அப்போது 27 பந்துகளில் 48 ரன்களை விளாசியிருந்தார் அவர். மேலும், கைல் ஜேமிசனும் ரன்அவுட்டாக, பெங்களூரு அணி இக்கட்டில் சிக்கியது.
ஆனாலும், மும்பை பெளலர்கள் கூடுதல் ரன்களை(12) வாரி வழங்கியதானது, கடைசி கட்டத்தில் பெங்களூருவுக்கு சாதகமாகிப் போனது. கடைசிப் பந்தில் 1 ரன் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அதை பெங்களூரு அணி தவறவிடவில்லை.
டி வில்லியர்ஸுக்கு அடுத்து மேக்ஸ்வெல் 39 ரன்களையும், கோலி 33 ரன்களையும் அடித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மும்பை சார்பில், பும்ரா & மார்கோ ஜேன்சன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். கடந்த தொடரிலும், முதல் போட்டியில் மும்பை அணி தோற்றது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]