புனே: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி, 1 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களை எடுத்துள்ளது.
டாஸ் வென்ற இங்கிலாந்து, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. அதன்படி, ரோகித்தும், தவானும் களமிறங்கினர்.
ஷிகர் தவான் மிக எளிதாக அரைசதம் கடந்தார். துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையில் இந்திய வீரர்கள் ஆடினார்கள். அதேசமயம், அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித், 37 பந்துகளில் 37 ரன்களை அடித்திருந்தபோது பெளல்டு ஆனார்.
தற்போது தவானுடன், கேப்டன் கோலி களமிறங்கியுள்ளார். தவான் 51 பந்துகளில் 62 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவர் இதுவரை 10 பவுண்டரிகளை அடித்துள்ளார்.
இந்திய அணியில், ஷர்துல் தாகுரும், நடராஜனும் சேர்க்கப்பட்டுள்ளனர். குல்தீப் யாதவ் இடம்பெறவில்லை.