டெல்லி: செந்தில் பாலாஜிஜாமின் வழக்கு இன்று பிற்பகல் விசாரணை நடைபெறும் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. அந்த விசாரணைக்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஓராண்டை கடந்து சிறையில் உள்ள முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாிஜி மீதான ஜாமின் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. இந்த நிலையில் வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

.இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறத  இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  செந்தில் பாலாஜி மீதான 3 வழக்கையும் அமலாக்கத்துறை விசாரிக்கிறதா அல்லது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை மட்டும் விசாரிக்கிறதா என தெளிவு தேவை என கூறியிருந்தார்.

இதையடுத்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் இந்த வழக்கில் ஆஜராக இருப்பதால், வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை  எ ஏற்று இன்று பிற்பகல் இறுதி வழக்காக விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை இன்று இறுதி வழக்காக மீண்டும் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.