‘Civil Engineering Learners’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், சுத்தியல் புகைப்படத்திற்கு , விக்னேஷ் பிரபாகர் என்பவரது காமெடி கருத்தால், உலகளவில் ட்ரெண்டானது #Pray_for_Neasamani.

சமூக வலைதளங்களில் அனைவருமே இந்த ஹேஷ்டேக்கில் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர்.

கான்ட்ராக்டர் நேசமணி பெரும் வைரலாகி வருவதால், திருப்பூரில் உள்ள பல்வேறு டி-ஷர்ட் நிறுவனங்களில் நேசமணி உருவம் பொறித்த டி-ஷர்ட்டுகளுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் ம் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்ற பெயர் வைத்துப் படம் எடுக்கவும் முடிவு செய்துவிட்டனர். ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்ற தலைப்புக்கு அனுமதி கேட்டு, தயாரிப்பாளர் சங்கத்தில் விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தது யார்? என்ற தகவலை தயாரிப்பாளர் சங்கம் வெளியிடவில்லை.

இது தொடர்பாக இயக்குநர் வெங்கடேஷ் தனது ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தில் நேற்று ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்ற பெயரில் ஒரு டைட்டில் ரெஜிஸ்டர் ஆகியுள்ளதாக செய்தி. இதைக் கணித்து நேற்றே ட்வீட் செய்தேன்.வாழ்த்துகள், அந்தத் தயாரிப்பாளருக்கு. #Pray_for_Neasamani” என்று தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]