சென்னை

ற்போது நடைபெற்று வரும் சர்தார் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சண்டை பயிற்சியாளர் மரணம் அடைந்துள்ளார்.

கார்த்தி நடித்த சர்தார் படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 15-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, விஜய் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். யுவன் சங்கர் ராஜா ‘சர்தார் 2’ படத்திற்கு இசையமைக்கிறார்.

இன்று சென்னை சாலிகிராமத்தில் நடந்த வந்த படப்பிடிப்பின்போது 20 அடி உயரத்தில் இருந்து சண்டை பயிற்சியாளர் ஏழுமலை தவறி விழுந்ததையடுத்து அவர் அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்., அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை உயிரிழந்துள்ளார்.

அவர் மேலே இருந்து கீழே விழுந்ததில், மார்பு பகுதியில் அடிபட்டு நுரையீரல் பகுதியில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.