டெல்லி: கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று தொடங்கியது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த பின்னர், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
அந்த வகையில் டெல்லியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது: கொரோனா தடுப்பூசி பணிகள் தொடங்கியுள்ள இந்த நாள் மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்கிறது.
பிரதமர் மோடி தலைமையில் ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவிற்கு எதிராக போராடி வருகிறோம். அந்த போராட்டம் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது என்று கூறினார்.