சென்னை,
தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த வைகோ 52 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு இன்று விடுதலையானார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மக்கள் பிரச்சினையில் தமிழக அரசுக்கு எதிராக வீரியத்துடன் போராடுவோம் என்று அதிரடியாக கூறினார்.
டாஸ்மாக் விஷயத்தில் தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. இதை மனதில் கொண்டு தமிழக அரசு விரைவில் முழு மதுவிலக்கு அளிக்க வேண்டும்.
அதற்கு மாறாக மக்கள் மீது அரசு தடியடி பிரயோகம் செய்ததற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், டாஸ்மாக் எதிர்த்து போராடிய பெண்கள் தாக்கப்படுவதும், அவர்கள்மீது வழக்குப் போடுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், சமீபத்தில் கடற்கரை பகுதியில் மே17 இயக்கத்தினர் நடத்திய மெழுகுவர்த்தி ஏந்தும் அமைதியான முள்ளி வாய்க்கால் படுகொலை தின நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி கொடுக்காததற்கு கண்டனம் தெரிவிப்ப தாகவும், நாம் தமிழகத்தில்தான் இருக்கிறோமோ என்று சந்தேகிக்க தோன்றுகிறது என்றும் கூறினார்.
ஏரி குளங்களை தூர் வாருவதற்கும், அதிலுள்ள வண்டல் மணல்களை விவசாயிகள் எடுத்துக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவித்ததாகவும் கூறினார்.