திருச்சி

தாய்லாந்து தலைநகர் பாங்காக் மற்றும் திருச்சி இடையே நேரடி விமன் சேவை தொடங்கி உள்ளது.

மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறக்கப்பட்ட பின்பு மேலும் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று முதல் திருச்சியில் இருந்து பாங்காக்கிற்கு, தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனம் இணைந்து புதிய விமான சேவையை துவங்கி இந்த விமானம் நேரடியாக திருச்சியில் இருந்து பாங்காக்கிற்கு இயக்கப்படுகிறது. இதன் முதல் சேவை நேற்று இரவு திருச்சி விமான நிலையத்தில் துவங்கியது.

இச்சேவை வாரத்திற்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக பாங்காக்கிற்கு இயக்கப்பட உள்ளது. நேற்று திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் விமானத்திற்கு விமான நிலைய ஆணைய குழுவின் சார்பில் வாட்டர் சல்யூட் முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேற்கண்ட மூன்று நாட்களில் இந்த விமானம் இரவு 10:35 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்து அடைந்து மீண்டும் இரவு 11 05 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து பாங்காக்கிற்கு புறப்பட்டு செல்லும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்ரிரவு பாங்காக்கில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 46 பயணிகளும் மீண்டும் திருச்சியில் இருந்து பாங்காக் புறப்பட்ட விமானத்தில் 176 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.