FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 11வது மற்றும் இறுதி சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றது.
இந்திய ஆடவர் அணி ஸ்லோவேனியா அணியை எதிர்கொண்டது. மகளிர் அணி அஜர்பைஜான் அணியை எதிர்கொண்டது.

இந்த சுற்றில் இந்திய அணியின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் ஸ்லோவேனியாவின் விளாடிமிர் பெடோசீவ்-வை எதிர்கொண்டார்.
துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய குகேஷ் இதில் வெற்றி பெற்றார். அதேபோல் அர்ஜுன் எரிகைசி – ஜன் சபெல்ஜ்ஜை வீழ்த்தினார்.

மகளிர் பிரிவில் சிறப்பாக ஆடிய திவ்யா தேஷ்முக் அஜர்பைஜானை சேர்ந்த கோவஹர் பெய்துள்ளயேவா-வை வீழ்த்தினார்.
இந்திய அணியின் இந்த வெற்றியின் மூலம் FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி ஓபன் கேட்டகிரியில் ஆடவர் மற்றும் மகளிர் என இருபிரிவிலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
Patrikai.com official YouTube Channel