சென்னை:
சென்னையில், இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளது

தமிழகம் முழுவதும், எச்3என்2(H3N2) வைரஸின் தாக்கம் காணப்படுகிறது. H3N2 வைரசுக்கு கிட்டத்தட்ட தொண்டை புண், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் போன்றவை அறிகுறிகள் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில், இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் 3 நாட்கள் கொண்டாலே போதுமானது. அதேபோல்,கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
Patrikai.com official YouTube Channel