சென்னை:

ன்னிய செலாவணி மோசடி வழக்கில்  எழும்பூர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜரானார். அவருக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் மலர்மதி முன் இன்று காலை டிடிவி தினகரன் ஆஜரானார். அப்போது, இதுகுறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற இருப்பதால், வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால், நீதிபதி தள்ளி வைக்க மறுத்து, பிற்பகல் 3 மணிக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டிடிவி தினகரன் நேரில் ஆஜரானார்.

அப்போது, அமலாக்கத்துறை தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக டிடிவிக்கு நீதிபதி விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவு தொடர்பாக, விசாரணையை தாமதப்படுத்திய தினகரனுக்கு நீதிபதி மலர்மதி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும்,  சட்டம் அனைவருக்கும் சமம் எனவும், நீண்ட காலமாக வழக்கை தாமதப்படுத்துவது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அந்நிய செலவாணி மோசடி வழக்கில் ஆஜராகாதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். வழக்கில் குற்றம் தொடர்பாக குற்றம் சாட்டவரிடம்தான் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து விசாரணையை மே 10ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.