சென்னை,
பெரா வழக்கில், பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா காணொலி காட்சி மூலம் கோர்ட்டில் ஆஜராக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 21ந்தேதி நடைபெற இருக்கும் விசாரணையின்போது, அந்நிய செலவாணி மோசடி வழக்கில் காணொலி காட்சி மூலம் சசிகலாஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அப்போது அவர் மீதான குற்றச்சாட்டு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படுகிறது.
ஏற்கனவே, அமலாக்கத்துறை கேள்விகளை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று கோரிய சசிகலா மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.